திருத்தந்தையின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்
இம்மானுவேல் மரியான் – வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தன்னுடைய ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளை இன்று ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கியிருக்கிறார்.
இன்று காலை அல்ஜீரிய நேரப்படி காலை மணி 9:20 க்கு அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீயர்ஸின் ஹவாரி பூமேடியேன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை மணி 10:30 க்கு அன்னாபாவின் ரபா பிடாட் விமான நிலையத்திற்கு வந்து சேர்கிறார்.
இந்த அன்னாபா நகரம்தான் பண்டைய காலத்தில் கிப்போ நகரம் என்று அழைக்கப்பட்டது. இங்குதான் புனித அகுஸ்தினார் வாழ்ந்தார். இதை குறித்துதான் நம்முடைய திருத்தந்தை அவர்கள் நான் கிப்போ நகரத்து புனித அகுஸ்தினாரின் மகன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கிப்போ நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஹிப்போ ரெஜியஸ் தொல்பொருள் ஆய்வு தளத்திற்கு (Hippo Regius Archaeological Site)சென்று பார்வையிடுகிறார்.
முற்பகல் மணி 11:35 க்கு அன்னபாவில் உள்ள புனித ஜீன் ஜுகான் (Saint Jeanne Jugan) என்பவரால் தொடங்கப்பட்ட, ஏழைகளின் சிறிய சகோதரிகளால் நடத்தப்படும் மா மேசன் (Ma Maison) முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியவர்களை சந்திக்கிறார்.
பகல் மணி 12:10 க்கு புனித அகுஸ்தினார் துறவற சபை இல்லத்திற்குச் சென்று (Augustinean Community House) அங்குள்ள குழுமத்தைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடுகிறார்.
பிற்பகல் மணி 03:30 க்கு புனித அகுஸ்தினார் பேராலயத்தில் (Basilica of St. Augustine) திருப்பலி நிறைவேற்றி, சிறப்பு மறையுரை ஆற்றுகிறார்.
மாலை 06:00 மணிக்கு அன்னாபாவின் ரபாஹ் பிடாட் விமான நிலையத்திலிருந்து (Rabah Bitat Airport) புறப்பட்டு இரவு மணி 07:10 க்கு அல்ஜீரியஸின் ஹுவரி புமெடியேன் விமான நிலையத்திற்கு (Houari Boumédiène Airport) வந்து சேர்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
