திருத்தந்தையுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் திருத்தந்தையுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்   (ANSA)

பிரான்ஸ் நாட்டு அதிபர் மாக்ரோன் திருத்தந்தையுடன் சந்திப்பு!

உலகெங்கிலும் நிலவும் மோதல்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களுடன், முக்கியமான அனைத்துலகப் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின; மேலும், உரையாடல் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான வாழ்வை மீண்டும் நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 10, வெள்ளியன்று, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் அவர்கள்,  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்திப்பதற்காக, வத்திக்கானின் புனித தமாசஸ் முற்றத்தை வந்தடைந்தார்.

தனது மனைவி பிரிஜித்துடன் வந்திருந்த அரசுத் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் அவர்களை,  திருத்தந்தை இல்லத்தின் (Papal Household) ஆளுநரகப் பிரதிநிதியான பேரருள்திரு லியோனார்டோ சபியென்சா அவர்கள் வரவேற்றார்.

தொடர்ந்து  அதிபர் மாக்ரோன் அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.  இது அவர்கள் இருவருக்கும் இடையிலான முதல் நேரடிச் சந்திப்பாகும்.

திருத்தந்தையுடனான இந்த சந்திப்பிற்குப் பிறகு, அதிபர் மாக்ரோன் அவர்கள் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களைச் சந்தித்தார்; அப்போது நாடுகள் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் காலகர் அவர்கள் உடனிருந்தார்.

அங்கு நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, திருப்பீடத்திற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான நல்லுறவு அங்கீகரிக்கப்பட்டது என்று வத்திக்கான் செய்தி தொடர்பகம்  தெரிவித்துள்ளது.

இறுதியாக, உலகெங்கிலும் நிலவும் மோதல்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களுடன், முக்கியமான அனைத்துலகப் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின; மேலும், உரையாடல் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான வாழ்வை மீண்டும் நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2026, 14:26