கல்தேய திருஅவையின் ஆயர்களுடன் திருத்தந்தை கல்தேய திருஅவையின் ஆயர்களுடன் திருத்தந்தை  (ANSA)

துன்பங்களின் வழியே இறைவனின் திருவுளம்: புதிய முதுபெரும் தந்தை தேர்வு!

புதிய முதுபெரும் தந்தை ஒரு பணிவான இடையராகவும், நம்பிக்கையில் ஒரு தந்தையாகவும், ஒற்றுமை, சேவை, இறைவேண்டல் மற்றும் ஆன்மீகப் பராமரிப்பு ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நம்பிக்கையாளர்கள் தங்களது வழிபாட்டுமுறை மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், அமைதியை மேம்படுத்தவும், அருள்பணியாளர்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், பொதுநிலையினர் நம்பிக்கையில் உறுதியாக இருக்க வலுப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 10, வெள்ளியன்று புதிய முதுபெரும் தந்தையை தேர்ந்தெடுப்பதற்காக உரோமில் கூடியுள்ள கல்தேய திருஅவையின் ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

இது திருஅவையின் பண்டைய திருத்தூது வேர்களையும் (Apostolic roots), மகிமை மற்றும் துன்பங்கள் நிறைந்த செழுமையான மறைபரப்புப் பாரம்பரியத்தையும் முன்னிலைப்படுத்துகிறது என்றும், இதில் துன்புறுத்தல்களும் சிதறுண்டு போதலும் அடங்கும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தச் சோதனைகள் கிறிஸ்துவின் உயிர்ப்பு வழியாக நம்பிக்கையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன என்றும், இந்த ஆயர் மாமன்றம் உலகார்ந்த நலன்களை விட இறைவனின் திருவுளத்தைத் தேடவும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படவும் உறுப்பினர்களை வலியுறுத்துகிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிய முதுபெரும் தந்தை ஒரு பணிவான இடையராகவும், நம்பிக்கையில் ஒரு தந்தையாகவும், ஒற்றுமை, சேவை, இறைவேண்டல் மற்றும் ஆன்மீகப் பராமரிப்பு ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

இறுதியாக, வன்முறைகளும் சவால்களும் இருந்தபோதிலும், ஆண்டவர் தங்களுடன்  பயணிக்கிறார் என்பதை நம்பி, அவர்கள் நம்பிக்கை, உரையாடல் மற்றும் அமைதி ஆகியவற்றின் சாட்சிகளாக இருக்குமாறு அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2026, 13:54