இடமிருந்து வலமாக: சாண்டாண்டர் மறைசாட்சிகளின் நினைவுச்சின்னம்; மரோனைட் தலைவர் எலியாஸ் ஹோயெக்; இந்தியாவில் பணியாற்றிய சலேசிய அருள்பணியாளர் கான்ஸ்தந்தினோ வென்த்ராமே இடமிருந்து வலமாக: சாண்டாண்டர் மறைசாட்சிகளின் நினைவுச்சின்னம்; மரோனைட் தலைவர் எலியாஸ் ஹோயெக்; இந்தியாவில் பணியாற்றிய சலேசிய அருள்பணியாளர் கான்ஸ்தந்தினோ வென்த்ராமே 

லெபனான் நாட்டின் 80 ஸ்பானிய தியாகிகளுக்கு அருளாளர் பட்டம் வழங்க திருத்தந்தை ஒப்புதல்!

1930-களில் ஸ்பெயினில் நடைபெற்ற கத்தோலிக்க எதிர்ப்புத் துன்புறுத்தல்களின் போது கொல்லப்பட்ட 80 பேருக்கு அருளாளர் பட்டம் வழங்க திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

80 பேருக்கு அருளாளர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், மேலும் நான்கு நபர்களின் வீரத்துவப் பண்புகளை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஏற்றுக்கொண்டார் .

மே 21, வியாழனன்று, புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்களைச் சந்தித்தபோது, விசுவாசத்திற்காக உயிர்நீத்த 80 புதிய அருளாளர்கள் தொடர்பான ஆணைகளை வெளியிடுவதற்கு திருத்தந்தை ஒப்புதல் அளித்தார்

அவர்களில் லெபனான் மரோனைட் முதுபெரும்தந்தை எலியாஸ் ஹோயக் மற்றும் 1930-களின் கத்தோலிக்க எதிர்ப்புத் துன்புறுத்தலின் போது கொல்லப்பட்ட ஸ்பானிய உள்நாட்டுப் போரின் 80 தியாகிகளும் அடங்குவர். இவர்களில் 67 அருள்பணியாளர்கள், மூன்று கார்மேல் சபைத் துறவிகள், மூன்று அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் ஏழு பொதுநிலையினர் அடங்குவர். மரணதண்டனைகள், சிறைவாசம் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட கொடூரமான மரணங்களை அவர்கள் சந்தித்தனர்.

சந்தோனியாவில் உள்ள சாந்தா மரியா டெல் புவேர்ட்டோ பங்குத்தந்தையான பிரான்சிஸ்கோ கோன்சலேஸ் டி கோர்டோவா, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது விசுவாசிகளைக் கைவிட மறுத்தார். சிறையாக மாற்றப்பட்ட ஒரு கப்பலில் அடைக்கப்பட்டிருந்தபோதும், அவர் தொடர்ந்து ஒப்புதல் அருள்சாதனங்களைக் கேட்டு, செபமாலையை செபித்தவர். தனது 48-வது வயதில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, தன் சக தோழர்களை ஆசீர்வதித்து அவர்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கிய பிறகு தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சலேசிய சபையைச் சேர்ந்த மறைபரப்புப்பணியாளரான அருள்பணியாளர் கோஸ்டான்டினோ வென்ட்ரேம், இத்தாலியில் பிறந்து  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் (குறிப்பாக மேகாலயாவில்) பல ஆண்டுகள் பணியாற்றி, அங்குள்ள பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்.

கேமரூன் நாட்டைச் சேர்ந்த காலணி அணியாத கார்மேல் சபை துறவியான சகோதரர் ஜீன்-தியரி, இளம் வயதிலேயே இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்து, நோயுற்ற காலத்திலும் மிகுந்த விசுவாசத்துடன் இருந்ததற்காக அறியப்படுபவர்.

ஸ்பெயினின் விஸ்காயா மாகாணத்தைச் சேர்ந்த ஸ்பானிய பெண் துறவியான மதர் மரியா அனா அல்பெர்டி எச்செசர்ரெட்டா தனது சபையின் வளர்ச்சிக்காகவும், ஏழை எளிய மக்களின் ஆன்மீக வாழ்விற்காகவும் அரும்பணியாற்றியவர்.

இத்தாலியின் சார்டினியா பகுதியைச் சேர்ந்த கப்புச்சின் சபை  துறவியான சகோதரர் நாசரேனோ டா புலா "இனிப்புகளைக் கொடுக்கும் புனிதர்” என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். ஏனெனில், இவர் குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் எப்போதும் இனிப்புகளை வழங்கி, அவர்களுக்கு இறைவனின் அன்பைப் போதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

லெபனான் இராணுவ அதிகாரியான நாயேஃப் அபு அசி என்பவர் நீண்டகாலமாக முதுகெலும்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் முதுபெரும் தந்தை ஹோயக்கை கனவில் கண்ட பிறகு, அந்த நோயிலிருந்து முற்றிலும் விடுதலையாகி குணம் பெற்றார். இது மருத்துவர்களால் விளக்க முடியாத ஒரு அதிசய நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2026, 10:56