புற்றுநோயிலிருந்து மீண்ட ஸ்பெயின் இளைஞரைச் சந்தித்த திருத்தந்தை

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

உரோமைக்கு அருகிலுள்ள திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 15 வயது இளைஞரான இக்னாசியோ கோன்சால்வஸைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்துப் பேசினார்.

கடந்த கோடைகாலத்தில் உரோமில் நடைபெற்ற இளைஞர்களுக்கான யூபிலி விழாவின் போது, இந்த இளைஞர் 'லிம்போமா' (Lymphoma) எனப்படும் புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முற்றிலும் குணமடைந்துள்ள இக்னாசியோ, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்ததுடன் அவரை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் டோர் வெர்காட்டாவில் இவருக்காக இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, யாரும் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் இயேசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு நேரில் சென்று இவரைப் பார்வையிட்டார்.

இக்னாசியோவின் குடும்பத்தினர் அவரது குணமடைதலையும் தங்களுக்குக் கிடைத்த ஆதரவையும்  ஒரு அற்புதம் என்றும், கடவுளின் அன்பின் அடையாளம் என்றும் விவரித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2026, 12:04