எரிசக்தி ஆலைக்கான ஒப்பந்தத்தில் திருப்பீடம் மற்றும் இத்தாலி கையெழுத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உரோமைக்கு அருகே வத்திக்கானுக்குச் சொந்தமான சாந்தா மார்த்தா களர்நிலப் பகுதியில் ஒரு வேளாண் மின்னழுத்த ஆலையைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் திருப்பீடமும் இத்தாலிய அரசும் ஜூலை 31, இவ்வியாழனன்று கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஆலை வத்திக்கான் நகரத்திற்குப் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அதேவேளையில், இந்நிலத்தை தொடர்ந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கும் என்று அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐந்து பிரிவுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தம், சுற்றுச்சூழல் பொறுப்புக்கான கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும், இது ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை இலக்குகள் மற்றும் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கே புகழ்!' (Laudato si) என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் படிப்பினைகளுடன் ஒன்றித்துச் செல்கிறது என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார தாக்கத்தைக் குறைப்பதற்கும், அந்தப் பகுதியின் இயற்கை சமநிலையைப் பாதுகாப்பதற்கும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்