இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே தீர்வு ஏற்பட திருப்பீடம் ஆதரவு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia அவர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு இரு நாடுகளின் தீர்வுகாண ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள பேராயர் Caccia அவர்கள், அமைதி மற்றும் நிலைத்தன்மையை அடைய பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளளார்.
மோதலைத் தீர்ப்பதற்கு பலம் அல்ல, மாறாக பல்நோக்கு உரையாடல் மிக முக்கியமானது என்று கூறிய பேராயர் Caccia அவர்கள், பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கு, அண்மை கிழக்கின் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமை (UNRWA) செய்து வரும் பணிகளை பாராட்டி, மத்திய கிழக்கு நாடுகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அதன் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
அண்மை கிழக்கின் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமை மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ள பேராயர், அந்த அமைப்பின் பணி சுதந்திரமாகவும் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு ஏற்பவும் தொடர்வதை உறுதிப்படுத்த அனைத்துலக ஆதரவுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் அண்மை கிழக்கின் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமைக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதரவை வலுப்படுத்துமாறு அனைத்து நாடுகளையும் வலியுறுத்தினார்.பேராயர் Caccia.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்