சிரியாவில் வெடிக்காத வெடிகுண்டுகளை அகற்றும் பணி சிரியாவில் வெடிக்காத வெடிகுண்டுகளை அகற்றும் பணி   (AFP or licensors)

சிரியாவில் வெடிக்காத வெடிகுண்டுகள் குறித்த 116 அறிக்கைகள்!

கடந்த ஒன்பது ஆண்டுகளில், 4, 22,000 வெடிக்காத வெடிகுண்டுகள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதில் பாதி குழந்தைகளை உள்ளடக்கியது : யுனிசெஃப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிரியா நாட்டுக் குழந்தைகள் வெடிக்காத வெடிகுண்டுகளால் (UXO) குறிப்பிடத்தக்க ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்தும், கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த 116 அறிக்கைகள் பற்றியும் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், 4,22,000  வெடிக்காத வெடிகுண்டுகள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதில் பாதி குழந்தைகளை உள்ளடக்கியது என்று உரைக்கும் அந்நிறுவனம், நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 2,50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இடப்பெயர்வு ஆபத்துக்களை அதிகரித்துள்ளது, ஏனெனில் வெடிக்காத வெடிகுண்டுகள் 3,24,000 என மதிப்பிடப்பட்டுள்ள வேளை, அவை 50 இலட்சம் குழந்தைகளைப் பாதித்துள்ளது  என்றும் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் வெடிக்காத வெடிகுண்டுகள் சிரியாவில் குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன எனவும், இது அவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் இரண்டையும் அச்சுறுத்துகிறது எனவும் வேதனையை வெளிப்படுத்தியுள்ள அந்நிறுவனம், உயிர் பிழைத்தவர்கள் பெரும்பாலும் கடுமையான காயங்கள், இயலாமைகள் மற்றும் கல்வி மற்றும் உடல்நலத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகலைச் சகித்துக்கொள்வதால், அவர்கள் இழுக்கு மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

சிரியா குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த வெடிக்காத வெடிகுண்டுகள் குறித்த கணக்குத் தீர்வு மற்றும் மறுகட்டமைப்பில் அவசர முதலீடுகள் அவசியம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜனவரி 2025, 13:24