அருள்பணியாளர் Ibrahim Faltas அருள்பணியாளர் Ibrahim Faltas 

மூன்றாண்டுகளாக பள்ளி செல்லாமல் இருக்கும் காசா குழந்தைகள்

குழந்தைப் பருவத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி, விளையாட்டு, கல்வி, கனவுகள் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ள அருள்பணியாளர் ஃபல்தாஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் நடந்து வரும் போர்ச்சூழலால் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்குள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் சூழல் இல்லை என்றும், பள்ளிக்கூடங்கள் இஸ்ரயேல் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் இடங்களாக இருந்ததால் அவை அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் இப்ராஹிம் ஃபல்தாஸ்.

செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட காணொளியில் காசாவில் நிகழ்ந்து வரும் சூழல் குறித்து எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் எருசலேம் புனித பூமியின் காவலராகிய பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் இப்ராஹிம் ஃபல்தாஸ்.

குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும், குழந்தைகள் நம் எதிர்காலம் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் எனவே இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அருள்பணி ஃபல்தாஸ்.

காசாவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன, அவை இனி கல்வி மற்றும் வளர்ச்சிக்கான இடங்கள் அல்ல என்றும், காசாவில் பள்ளி இல்லாத மூன்றாவது ஆண்டு தொடங்கிவிட்டது என்றும் வருத்தமளித்துள்ளார் அருள்பணி ஃபல்தாஸ்.

குழந்தைப் பருவத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி, விளையாட்டு, கல்வி, கனவுகள் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ள அருள்பணியாளர் ஃபல்தாஸ் அவர்கள், போர்நிறுத்தம் ஏற்பட அக்காணொளியில் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் உள்ள முழு தலைமுறையினரும் தங்கள் கடந்த காலத்தை அழித்துவிட்டனர், அவர்களின் நிகழ்காலம் சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ளது, அவர்களின் எதிர்காலம் மறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அருள்பணியாளர் ஃபல்தாஸ் அவர்கள், இந்த மனிதாபிமானமற்ற நிலைமை விரைவில் முடிவுக்கு வரும்" என்ற நம்பிக்கையுடன் தனது காணொளியினை நிறைவு செய்துள்ளார்.

UNICEF: 18,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்

ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமான இந்த 23 மாத போர் மற்றும்  மோதலின்போது IDF குண்டுவீச்சு மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் 18,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக UNICEF மதிப்பிட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 28 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன நலவாழ்வு அதிகாரிகளின் கூற்றுப்படி, 42,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான ஐ.நா. குழு குறைந்தது 21,000 குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்களாக விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் இன்னும் பலர் இன்னும் காணவில்லை அல்லது இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் தரவுகள் எடுத்துரைக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 செப்டம்பர் 2025, 16:03