வறுமையில் வாடும் குழந்தைகள் வறுமையில் வாடும் குழந்தைகள்  

வறுமையில் தவிக்கும் 40 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் : யூனிசெஃப

"குழந்தை வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கவும், சமூகப் பாதுகாப்பு மற்றும் சேவைகளில் முதலீடு செய்யவும்,குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கு நிலையான மற்றும் ஒழுக்கமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஆதரவு அளிக்கவும் வேண்டும்" : யுனிசெஃப்

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 41 கோடியே 7 இலட்சம் குழந்தைகள் அடிப்படைத் தேவைகளில் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், 11 கோடியே 8 இலட்சம் பேர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம் .

உலகளவில் 19 விழுக்காட்டு குழந்தைகள் குறிப்பாக, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில், கடுமையான நிதி மற்றும் வறுமையைச் சந்தித்து வருவதாகவும், அங்கு நலவாழ்வு  மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.

மேலும் மோதல்கள், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் குழந்தைகளுக்கு எதிராக வறுமை அதிகரித்துள்ளதாகவும்  ஆனால் அதேவேளையில், ஸ்லோவேனியா தனது வலுவான சமூகக் கொள்கைகள் மூலம் வறுமையைக் குறைத்துள்ளதாகவும் உரைக்கிறது அவ்வறிக்கை.

குழந்தைப் பருவ வறுமைப் பிரச்சினையில் இத்தாலி ஒரு சிறிய முன்னேற்றத்தைக் காண்பித்தாலும், குறிப்பிடத்தக்க அளவில், குழந்தைப் பருவ துயரங்களை இன்னும் எதிர்கொள்கிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கவும், சமூகப் பாதுகாப்பு மற்றும் சேவைகளில் முக்கியத்துவம் காட்டவும், குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கு நிலையான மற்றும் ஒழுக்கமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஆதரவு அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது அந்நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 நவம்பர் 2025, 14:36