காசாவில் மக்களின் நிலை காசாவில் மக்களின் நிலை   (AFP or licensors)

உதவிப் பொருட்களின் பற்றாக்குறையால் காசா மக்கள் பாதிப்பு!

காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களால் அதன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது மற்றும் அதன் 23 இலட்சம் குடியிருப்பாளர்கள் கடுமையான வறுமையாலும் மருத்துவ சீர்கேட்டினாலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்

உதவிப்பொருள்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், காசாவில் நிலைமை மோசமாக உள்ளது என்றும், குறிப்பிட்ட நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், குடியிருப்பாளர்கள் மருத்துவ மற்றும் பிற தேவைகளுக்காக எகிப்துக்கு பயணிக்க அனுமதிக்கும் வகையில் இரஃபாவின் எல்லைப்பகுதியைத் திறக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது என்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது

இஸ்ரேலியல் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் உணவு, மருந்து மற்றும் குளிர்கால பொருள்களை விநியோகம் செய்வது பெரிய அளவு தடைபட்டுள்ளதால், அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் போராடி வருகிறது என்றும், பயன்பாட்டிலுள்ள பலகூடாரங்கள் பழுதடைந்துள்ளதால் கடுமையான வானிலையை எதிர்கொள்ள குறைந்த அளவிளான பாதுகாப்பினையே அவைகள் கொடுத்து வருகின்றன என்றும் அந்நிறுவன கூறியுள்ளது.

அங்கு மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால், 9,400 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த மோதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும்  அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் காசாவின் மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு ஏறத்தாழ  5.81 இலட்சம் கோடி அளவிற்குச் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த மோதல்களால் காசாவின் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது மற்றும் அதன் 23 இலட்சம் குடியிருப்பாளர்கள் கடுமையான வறுமையாலும் மருத்துவ சீர்கேட்டினாலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று  சுட்டிக்காட்டியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 டிசம்பர் 2025, 14:07