வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள்  வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள்  

காங்கோவில் வன்முறை காரணமாக 5,00,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

சிறுவர்களைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ள யுனிசெஃப் நிறுவனம், இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான அவசர கால மனிதாபிமான உதவிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

டிசம்பர் 15, திங்களன்று காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, 1,00,000 குழந்தைகள் உட்பட 5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2 முதல் இடம்பெற்று வரும் இவ்வன்முறைத் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம், குறைந்தது ஏழு பள்ளிகள்மீது  நடத்தப்பட்ட தாக்குதல்களில் நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடம்பெயர்ந்தவர்களில் பெரும் பகுதியினர் தங்களின் பாதுகாப்பிற்காக புருண்டி எல்லையைக் கடந்து தஞ்சமடைந்துள்ளதாகவும், டிசம்பர் 6 முதல் 11 வரை மட்டும் 50,000-க்கும் அதிகமானோர் அங்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளது.

சிறுவர்களைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ள யுனிசெஃப் நிறுவனம், இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான அவசர கால மனிதாபிமான உதவிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 டிசம்பர் 2025, 14:25