தேடுதல்

கர்தினால் ஜென் கர்தினால் ஜென் 

ஹாங்காங்கில் கர்தினால் ஜென் கைது, திருப்பீடம் கவலை!

கர்தினால் ஜென் கைது செய்யப்பட்டுள்ளதைத் திருப்பீடம் கவலையுடன் பார்க்கும் அதேவேளையில் அங்குத் தொடர்ந்து நிகழும் சூழ்நிலையைத் தீவிரமாக உற்றுநோக்கிக் கவனித்து வருகிறது: மத்தேயோ புரூனி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2002 முதல் 2009 வரை ஹாங்காங் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த 90 வயதான கர்தினால் ஜோசப் ஜென் ஹாங்காங் அதிகாரிகளால் மே 11, இப்புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் தேசிய பாதுகாப்பை கண்காணிக்க அமைக்கப்பட்ட காவல் பிரிவால் கர்தினால் ஜென் அவர்கள் புதன்கிழமை மாலை காவலில் வைக்கப்பட்டார் என்றும்,

Wan Chai காவல் நிலையத்திற்கு வெளியே அவரின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகவியலாளர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிட்டதால் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

612 மனிதாபிமான நிவாரண நிதியங்களின் நிர்வாகியாக, அவரது பங்கு தொடர்பாக கர்தினால் ஜென் மீது "வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு" என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும், இந்த நிவாரண நிதியானது ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சட்டம்  மற்றும் மருத்துவச் செலவுகளை  செலுத்துவதற்கு ஆதரவளித்தது என்றும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை பிற்பகல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள், கர்தினால் ஜென் கைது செய்யப்பட்டதை திருப்பீடம் கவலையுடன் பார்க்கிறது என்றும், அங்குத் தொடர்ந்து நிகழும் சூழ்நிலையைத் தீவிரமாக உற்றுநோக்கிக் கவனித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

கர்தினால் ஜென்னுடன், முன்னாள் எதிர்க்கட்சி எம்.பியும் வழக்கறிஞருமான மார்க்கரெட் எங், கல்வியாளர் Hui Po-keung, மற்றும் பாடகரும் பாடலாசிரியருமான டெனிஸ் ஹோ ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதை ஹாங்காங் சட்ட ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2022, 15:28