தேடுதல்

FAQ

வத்திக்கான் செய்திகள் என்பது எது?

வத்திக்கான் செய்திகள் என்பது, புதிய வத்திக்கான் தகவல் பக்கமாகும். அதில், திருத்தந்தை பிரான்சிஸ், திருப்பீடம், உலக அளவில் திருஅவை மற்றும், உலகளாவிய விவகாரங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைச் சுடச்சுட வாசிக்கலாம். வத்திக்கான் செய்திகள், முகநூல், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டகிராம் ஆகிய முக்கிய சமூக ஊடகங்களிலும் அவை பதிவுசெய்யப்படுகின்றன.  

வத்திக்கான் செய்திகளுக்கு செய்தி மடல் உள்ளதா?.

ஆம் உள்ளது. இச்செய்தி மடலில் நீங்கள் தினமும், கட்டணமின்றி உங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்யலாம். அதற்கு இந்தப் பக்கத்தை சொடுக்கவேண்டும் .

இணைய பக்கத்தில் வத்திக்கான் செய்திகளை வாசிப்பதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டால் நான் யாருக்கு எழுதுவது?

இணைய பக்கத்தில் வத்திக்கான் செய்திகளை அல்லது செய்தி மடலை வாசிப்பதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டால், கீழ்க்காணும் முகவரிக்கு எழுதலாம் tamil@vaticannews.va அல்லது webmaster@vaticannews.va அல்லது info@vaticannews.va.

வத்திக்கான் செய்திகளில் பதிவுசெய்யப்படும் கட்டுரைகள், செய்திகள் போன்றவற்றை நான் பயன்படுத்தலாமா?

வத்திக்கான் செய்திகளில் பதிவுசெய்யப்படும் கட்டுரைகள், செய்திகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்குள்ள விதிமுறைகளை அறிவதற்கு, என்ற இணையபக்கத்தைத் திறந்து பாருங்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் அதிகாரப்பூர்வ உரைகளை எங்கே காணலாம்?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் உரைகள் மற்றும், செய்திகளை முழுவதுமாக வாசிப்பதற்கு, வத்திக்கானின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் என்பதைச் சொடுக்குமாறு பரிந்துரைக்கின்றோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் நிகழ்வுகள் குறித்த தேதிகளை எவ்வாறு நான் அறிந்துகொள்வது?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு வத்திக்கானின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தைத் திறந்து அதில் என்பதைச் சொடுக்கினால், திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம் .

திருத்தந்தையின் ஆசீர்கொண்ட ஒரு பத்திரத்தை எவ்வாறு பெறுவது?

எனப்படும் இந்த பத்திரத்தைப் பெறுவதற்கு என்ற இணையதள பக்கத்திற்கு எழுதினால், விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரையில் எவ்வாறு கலந்துகொள்வது?

இதில் கலந்துகொள்வதற்குரிய அனுமதிச் சீட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. இந்த சீட்டுகளைப் பெறுவதற்கு என்ற இணையபக்கம் வழியாக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எந்த முகவரியில் கடிதம் எழுதுவது?

“Sua Santità Papa Francesco. Casa Santa Marta. 00120 Città del Vaticano”

திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கு எவ்வாறு நான் நன்கொடை வழங்குவது?

திருத்தந்தையின் பிறரன்புப்பணி, புனித பேதுரு காசு  என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலகளாவியத் திருஅவையின் பெருமளவான தேவைகளுக்கு ஆதரவளிக்கவும், மிகத் தேவையில் இருப்போருக்கு ஆதரவாக தோழமை முயற்சிகளை மேற்கொள்ளவும் தேவைப்படும் அனைத்துத் தகவல்களும் என்பதைச் சொடுக்கினால் கிடைக்கும்.

வத்திக்கான் அருங்காட்சியகம் மற்றும் வத்திக்கான் தோட்டங்கள்பற்றிய தகவல்கள் எங்கே கிடைக்கும்?

வத்திக்கான் அருங்காட்சியகம், வத்திக்கான் தோட்டங்கள், காஸ்தெல் கந்தோல்ஃபோ அப்போஸ்தலிக்க மாளிகை ஆகியவற்றை, தனியாகவும், வழிகாட்டியோடும் பார்வையிட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அனுமதிச் சீட்டுகள், முன்பதிவுகள் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு (வத்திக்கான் அருங்காட்சியகம்) என்ற இணையபக்கத்தைத் திறக்குமாறு உங்களை அழைக்கிறோம்.

வத்திக்கானின் பெருங்கோவிலுக்குச் செல்வதற்கு காலஅட்டவணைகள் என்ன?

திருத்தந்தையரின் பெருங்கோவில்களில் (புனித பேதுரு, உரோம் சுவருக்கு வெளியே அமைந்துள்ள புனித பவுல், புனித யோவான் இலாத்தரன், புனித மேரி மேஜர்) நடைபெறும் திருப்பலிகள் மற்றும் ஒப்புரவு அருளடையாளங்கள் பற்றிய தகவல்களை அறிவதற்கு, வத்திக்கானின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தைத் திறக்கவேண்டும்.

வத்திக்கானின் நாணயங்கள் மற்றும், தபால்தலைகளை எங்கே வாங்கலாம்?

வத்திக்கானின் நகர மேலாண்மை இணையப்பக்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள என்பதைச் சொடுக்கினால், இவற்றை வாங்குவதற்குரிய தகவல்கள் கிடைக்கும்.

திருத்தந்தையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எவ்வாறு வாங்குவது?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது எடுக்கும் புகைப்படங்களை வாங்குவதற்கும் முன்பதிவுசெய்வதற்கும் (வத்திக்கான் புகைப்படப்பணி-வத்திக்கான் ஊடகம்) என்ற இணையபக்கத்தில் அனைத்து விவரங்களும் தரப்பட்டுள்ளன

வத்திக்கானில் வெப்காம் உள்ளதா?

ஆம். வத்திக்கான் நகர நாட்டின் மிக முக்கியமான சில இடங்களை, அவை இருப்பதுபோலவே பார்ப்பதற்கு  என்ற இணையபக்கத்திற்குச் செல்லவேண்டும்