தேடுதல்

ஒருங்கிணைந்த பயணத்திற்கான படம் ஒருங்கிணைந்த பயணத்திற்கான படம் 

ஐரோப்பிய கண்டத்திற்கான ஒருங்கிணைந்த பயணக் கூட்டம் ஆரம்பம்

39 ஐரோப்பிய ஆயர் பேரவையைச் சார்ந்த 156 பேர், CCEE ஆல் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்ட 44 பேர் ஆகியோர் ஒன்றுகூடி ஆயர் மாமன்றத்தின் சவால்கள் மற்றும் பயன்கள் பற்றியும் கலந்துரையாடுகின்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செக் நாட்டின் தலைநகரான Prague-வில் ஒருங்கிணைந்த பயணச் செயல்பாடுகளுக்கான ஆயர் பேரவையின் மூன்றாம் கட்டக் கூட்டம் பிப்ரவரி 5 முதல் 12 வரை நடைபெற்று வரும் வேளையில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து இருநூறு பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை  மாலை தொடங்கப்பட்ட ஐரோப்பிய கண்டத்திற்கான ஒருங்கிணைந்த பயணக் கூட்டமானது ஒற்றுமை, பங்கேற்பு, பணி என்பதன் அடிப்படையில் கலந்துரையாடப்பட இருக்கின்றது.

Prague, பேராயர் Jan Graubner அவர்களின் தலைமையில் Strahov-வில் உள்ள Premonstratensians ஆலயத்தில் திருப்பலியுடன் தொடங்கப்பட்ட இக்கூட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 முதல் 10 வரை நடைபெறும் முதல் பகுதியில், ஏறக்குறைய 200 பிரதிநிதிகள் அதாவது, 39 ஐரோப்பிய ஆயர் பேரவையைச் சார்ந்த 156 பேர், CCEE ஆல் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்ட 44 பேர் ஆகியோர் ஒன்றுகூடி ஆயர் மாமன்றத்தின் சவால்கள் மற்றும் பயன்கள் பற்றியும் எடுத்துரைப்பர்.

பிப்ரவரி 11 முதல் 12 வரை நடைபெறும் இரண்டாவது பகுதியில், 39 தலைவர்கள் ஒன்றுகூடி விவாதங்களின் முடிவுகளை மதிப்பிட்டு, மார்ச் மாதத்திற்குள் ஆயர் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் தொகுப்பிற்கான வேலையையும் தொடங்குவார்கள்.

பிப்ரவரி 24 வெள்ளி முதல் 27 திங்கள் வரை ஆசிய ஆயர் பேரவையானது ஆசிய கண்டத்தின் சார்பாகத் தாய்லாந்தின் பாங்காங்கில் உள்ள Baan Phu Waan மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

  பிப்ரவரி 5 முதல் 12 வரை ஐரோப்பாவிற்கு ப்ராக்கிலும் (Prague), ஆஸ்திரேலியா, ஓசியானியாவிற்கு சுவாவிலும் (Suva), ஆப்ரிக்காவிற்கு மார்ச் மாதம் 1 முதல் 6 வரை Addis Ababa,விலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மார்ச் 17 முதல் 23 பொகொட்டாவிலும் (Bogota), வட அமெரிக்காவிற்கு பிப்ரவரி 13 முதல் 17 ஒர்லாந்தாவிலும் (Orlando), மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிப்ரவரி 12 முதல் 18 பெய்ரூட்டிலும் (Beirut) நடைபெற உள்ளது.

பங்கேற்பாளர்களின் பட்டியலைத் தவிர, ஏறத்தாழ 400 பேர் இணையதளம் வழியாகவும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2023, 14:30