தேடுதல்

பெனதாதுவின் இறப்பை முன்னறிவித்த எலிசா பெனதாதுவின் இறப்பை முன்னறிவித்த எலிசா 

தடம் தந்த தகைமை – பெனதாதுவின் இறப்பை முன்னறிவித்த எலிசா

எலிசா மறுமொழியாக, “நீ போய், ‘நீர் நலமடைவது உறுதி’ என்று சொல்; ஆனால், ‘அவன் செத்துப்போவது திண்ணம்’ என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்” என்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். ‘கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்’ என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த மன்னன் அசாவேலிடம், “கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். ‘நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?’ என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா” என்றான். எனவே, அவன் தமஸ்குவில் கிடைக்கக்கூடிய எல்லா விதமான அரும்பொருள்களையும் நாற்பது ஒட்டகச் சுமையளவு கையோடு அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு சென்றான்.

அவர் முன் வந்து நின்று அவன் அவரை நோக்கி, “நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா? என்று கேட்குமாறு சிரியாவின் மன்னனும் உம் புதல்வனுமான பெனதாது உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார்” என்றான். எலிசா மறுமொழியாக, “நீ போய், ‘நீர் நலமடைவது உறுதி’ என்று சொல்; ஆனால், ‘அவன் செத்துப்போவது திண்ணம்’ என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்” என்றார். பிறகு, கடவுளின் அடியவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2024, 12:52