தேடுதல்

எசேக்கியா அரசனுக்கு அனுப்பப்பட்ட் செய்தி எசேக்கியா அரசனுக்கு அனுப்பப்பட்ட் செய்தி 

தடம் தந்த தகைமை – எசேக்கியாவுக்கு அருளப்பட்ட அடையாளம்

எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்; இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்;

மெரினா ராஜ் - வத்திக்கான்

எசேக்கியா அரசனுக்கு கொடுக்கப்பட்ட செய்தி, அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த கற்குவியலாக நீ ஆக்க வேண்டுமென்பதை இப்பொழுது நான்தான் நிறைவேறச் செய்தேன். அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து கலக்கமுற்று அவமானமடைந்தனர்; வயல்வெளிப் புல் போலவும், கூரைகளில் முளைத்து வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப்பூண்டு போலவும் ஆயினர். நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும். எனக்கு எதிராகநீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.

நீ எனக்கு எதிராகப் பொங்கிஎழுந்தாலும், உன் ஆணவம் என்செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன் மூக்கில் வளையத்தையும் உன்வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விரட்டுவேன்! எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்; இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்; ஆனால், மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்;

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜனவரி 2025, 11:37