தேடுதல்

அரசர் நெபுகத்னேசர் முன் மந்திரவாதிகள் அரசர் நெபுகத்னேசர் முன் மந்திரவாதிகள் 

தடம் தந்த தகைமை : அரசர் நெபுகத்னேசர் கண்ட கனவு

“அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்”

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நெபுகத்னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தான். அப்பொழுது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அவர்களும் வந்து அரசன் முன்னிலையில் நின்றார்கள். அரசன் அவர்களை நோக்கி, “நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்” என்றான். அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, “அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்” என்று கூறினார்கள்.

அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு. ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில், அன்பளிப்புகளும் பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆகையால் நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூறுங்கள்” என்று கூறினான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2025, 11:32