தேடுதல்

காங்கோவின் வெள்ளப் பெருக்கு காங்கோவின் வெள்ளப் பெருக்கு 

காங்கோ குடியரசு வெள்ளப்பெருக்கில் காரித்தாஸ் அமைப்பின் பணிகள்

காரித்தாஸ் அதிகாரி : காங்கோ குடியரசில் ஏறக்குறைய 2000 குடும்பங்கள் குடியிருப்புக்கள் இன்றி தவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக நிவாரண உதவிகள் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நகர்களை வடிவமைக்கும்போது, அவைகள் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்து வருங்காலத்தில் மக்களைக் காப்பாற்றும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் என காங்கோ குடியரசின் காரித்தாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் கசாபா நதியில் மழை காரணமாக நீர்ப்பெருக்கு ஏற்பட்டு Tanganyika ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களை அடித்துச் சென்றதில் 100 பேருக்கு மேல் மடிந்து 50 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 28 பேர் காயமுற்றுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இத்தகைய நிலைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்கும் வகையில் திட்டமிடல்கள் இருக்க வேண்டும் என விண்ணப்பித்தது.

பெருமளவான பொருள் சேதத்தை உருவாக்கியுள்ள இந்த மழையால் அதிக அளவில் உயிரிழந்தவர்கள் குழந்தைகளும் முதியோருமே என்றார் காங்கோ குடியரசின் காரித்தாஸ் தகவல் தொடர்பு அதிகாரி Elie Mbulegheti.

பல கட்டுமான அமைப்புக்கள் சேதமாக்கப்படுள்ள அதேவேளை, நகருக்குள் பெருக்கெடுத்த நீரால் பல நலமையங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன எனவும் கூறினார் அவர்.

ஏறக்குறைய 2000 குடும்பங்கள் குடியிருப்புகள் இன்றி தவிப்பதாகவும், வெள்ளப்பெருக்கு காரணமாக நிவாரண உதவிகள் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அறிவித்தார் அந்நாட்டின் காரித்தாஸ் அதிகாரி.

அரசியல், மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மக்களை வாட்டிவரும் வேளையில் இயற்கை பேரழிவுகளும் அவர்களை வாட்டுவதாக காங்கோ குடியரசின் காரித்தாஸ் தகவல் தொடர்பு அதிகாரி Mbulegheti மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2025, 16:31