தடம் தந்த தகைமை – சாலமோனுக்கு அரசர் தாவீது கூறிய வார்த்தைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தாவீது தன் மகன் சாலமோனை நோக்கி, இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக! உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து இஸ்ரயேலை ஆள்வதற்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் ஆண்டவர் உனக்குக் தந்தருள்வாராக! ஆண்டவர் மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து அதன்படி செய்தால் நீ வளம் பெறுவாய்!
திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் ‘டன்’ பொன்னும், நாற்பதாயிரம் ‘டன்’ வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்; மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்; நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய். வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர். எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக!” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்