கொரிய தலத்திருஅவை மறைச்சாட்சிகளின் 100-வது ஆண்டு நிறைவு!
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
ஜூலை 5, சனிக்கிழமையன்று, தென் கொரியாவின் சியோல் மறைமாவட்டம், கிஹே (1839) மற்றும் பியோங்-ஓ (1846) துன்புறுத்தல்களின் போது விசுவாசத்திற்காக உயிர் துறந்த 79 கொரிய மறைச்சாட்சிகள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 100-வது ஆண்டின் நிறைவைக் கொண்டாடியுள்ளது.
துன்புறுத்தல் மற்றும் சோதனைகளிலும் கூட, இந்த மறைச்சாட்சிகள் ஒருபோதும் இயேசுவின் மீதான தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. அதேவேளையில், அவர்களின் சகிப்புத்தன்மையையும் நம்பிக்கையையும் ஆழப்படுத்தியுள்ளது என்றும், இறுதியில் மரணத்தைக் கூட வென்ற இயேசுவின் மீதுள்ள உண்மையான நம்பிக்கையாக அது உருப்பெற்றுள்ளது என்றும், தனது மறையுரையில் சுட்டிக்காட்டியுள்ளார் சியோல் பேராயர் பீட்டர் சூன்-தைக் சுங்.
இச்சிறப்பு வழிபாட்டிற்காக 1000-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் சியோலில் உள்ள சியோசோமுன் திருத்தலத்தின் வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒன்று கூடியதாகவும் இதுகுறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
19-ஆம் நூற்றாண்டில் கொரிய தலத்திருஅவையில் ஏறக்குறைய 16,000 கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டதாகவும், 1895-ஆம் ஆண்டு வரை கொரியாவில் கத்தோலிக்கர்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.
கிஹே மற்றும் பியோங்-ஓ துன்புறுத்தல்களில் கொல்லப்பட்ட 79 கொரிய மறைச்சாட்சியர் 1925-ஆம் ஆண்டு, ஜூலை 5-ஆம் தேதியன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். பின்னர் 1968-ஆம் ஆண்டில் 24 மறைச்சாட்சிகளைக் கொண்ட இரண்டாவது குழுவிற்கு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளர் பட்டம் வழங்கினார், இறுதியாக, மொத்தம் 103 பேர் கொண்ட இந்த இரு குழுக்களும் 1984 -ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்