தேடுதல்

பிலிப்பீன்ஸ் நாட்டின் இயற்கைப்  பேரழகு  பிலிப்பீன்ஸ் நாட்டின் இயற்கைப் பேரழகு  

பிலிப்பீன்சில் சுற்றுச்சூழல் நீதியை ஊக்குவிக்கும் குடிமக்கள் சமூகம்!

அகுசன் பெட்ரோலியம் மற்றும் கனிம நிறுவனத்தை (APMC) ஆதரிக்கும் இந்த முடிவு, சுற்றுச்சூழலையும் பூர்வக்குடி மக்களின் உரிமைகளையும் அச்சுறுத்துவதாக குடிமக்கள் சமூகம், கத்தோலிக்கச் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் எச்சரித்துள்ளன

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் உச்ச நீதிமன்றம், ஆக்ஸிடென்டல் மிண்டோரோவில் 25 ஆண்டுகால சுரங்கத் தடையை இரத்து செய்துள்ள அதேவேளை, உள்ளூர் அரசுகளின் குறிப்பிட்ட திட்டங்களை எதிர்த்தாலும், பெரிய அளவிலான சுரங்கங்களுக்கு முழுமையான தடையை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளதாகக் கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

அகுசன் பெட்ரோலியம் மற்றும் கனிம நிறுவனத்தை (APMC) ஆதரிக்கும் இந்த முடிவு, சுற்றுச்சூழலையும் பூர்வக்குடி மக்களின் உரிமைகளையும் அச்சுறுத்துவதாக குடிமக்கள் சமூகம், கத்தோலிக்கச் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் எச்சரித்துள்ளன என்று உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.  

இந்த வழக்கு 2008-ஆம் ஆண்டு பொதுமக்களின் எதிர்ப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக ஆக்சிடென்டல் மின்டோரோ தடை விதித்ததிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகின்றது என்றும், APMC 2014 - இல் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது, மேலும் உச்ச நீதிமன்றம் இப்போது அதற்கு எதிரான 2018 - ஆம் ஆண்டின் கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது, இது தேசிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதை வலியுறுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.

இந்தத் தீர்ப்பு ஓரியண்டல் மின்டோரோவின் இதேபோன்ற அவசரச் சட்டத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், இது பரந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவுகளைப் பற்றிய அச்சங்களை எழுப்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்நிலையில் ஆயர் மொய்சஸ் கியூவாஸ் மற்றும் அருள்பணியாளர் எட்வின் கரிகஸ் உள்ளிட்ட மத மற்றும் சுற்றுச்சூழல் தலைவர்கள், இந்த முடிவைக் கண்டித்து, சுரங்கத்தை ஒரு தார்மீக மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த பிரச்சனை என்று கூறி, உரையாடல், இறைவேண்டல் மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான ஆதரவு மூலம் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூலை 2025, 12:36