தேடுதல்

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை - இறையாட்சி உங்கள் நடுவேயே

உங்கள் நடுவேயே; எனும் சொல்லால் கடவுளின் எண்ணம், திட்டம், செயல்பாடு நமக்குள் செயல்படுகிறது. அதைச் செயல்பட விடாமல் நாம் தடுக்கிறோம் என்பதே உண்மை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.இதோ ,இங்கே அல்லது அதோ அங்கே எனச் சொல்லமுடியாது.ஏனெனில் உங்கள் நடுவேயே செயல்படுகிறது (லூக் 17:20-21) என்றார் இயேசு.

இறையாட்சி பற்றிய இயேசுவின் போதனைகள் பரிசேய, சதுசேயக் குழுமங்களுக்கு நகைப்பாகத் தென்பட்டன. தாங்கள் நேர்மையாக, நேர்த்தியாகவே வாழ்வதாகக் கருதினர். எனவேதான் இயேசுவிடம் அவ்வப்போது பற்பல கேள்விகளை எழுப்பினர். யூதர்களின் பார்வையில் இந்த உலகம் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது.அப்படியானால் எப்படி, எப்போது அந்தக் கடவுளாட்சி இங்கு வந்து கரைசேரும் என எண்ணியே இக்கேள்வி அவிழ்க்கப்பட்டது. யாவே வந்தால் ஏற்கெனவே உள்ள சட்டங்களின் அடிப்படையில் யாவும் நெறிப்படுத்துவார் என்ற நம்பிக்கை யூத சமூகத்துள் நிலவியது.ஆனால் அந்த யாவே தங்கள் வழியாக, தங்களைச் சூழ வாழ்வோர் வழியாகச் செயல்பட விழைகிறார் என்பதை மறந்தனர். உங்கள் நடுவேயே; எனும் சொல்லால் கடவுளின் எண்ணம், திட்டம், செயல்பாடு நமக்குள் செயல்படுகிறது. அதைச் செயல்பட விடாமலும், சமநிலை வராமலும் நாம் தடுக்கிறோம் என்பதே உண்மை. 

இறைவா! நன்மனிதர்கள், நற்செயல்கள் வழியாக உம் இருப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றீர். அதனை உணரும் உள்ளம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஆகஸ்ட் 2025, 13:20