தடம் தந்த தகைமை - கடவுளிடம் ஞானத்திற்காக மன்றாடிய சாலமோன்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்; கேள்” என்று கூறினார். அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, “என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்; அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர். கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்; ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர். எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில், கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?” என்றார்.
கடவுள், சாலமோனை நோக்கி, “செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய். எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்