கோர்தோபா பேராலயத்தின் தீயை விரைவாக அணைத்த தீயணைப்பு வீரர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்பெயினின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்தோபா பேராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதிகப்படியான பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்றும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தினை, தீயணைப்பு வீரர்கள் முழு மூச்சுடன் இணைந்து அணைக்க உதவினர் என்றும் எடுத்துரைத்தார் ஆயர் தெமெத்ரியோ பெர்னாண்டஸ்.
ஆகஸ்டு 8, வெள்ளியன்று இரவு 9 மணியளவில், ஏற்பட்ட தீ விபத்தினால் வியத்தகு தீப்பிழம்புகள் இருந்தபோதிலும் கோர்தோபா பேராலயத்தின் தீ விரைவாக அணைக்கப்பட்டது என்றும், வரலாற்றுச் சிறப்புக்க பேராலயத்தை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர் என்றும் உள்ளூர் செய்திகளுக்குத் தெரிவித்தார் கோர்தோபா மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் தெமெத்ரியோ பெர்னாண்டஸ்.
முன்னாள் மசூதியாக இந்த பேராலயமானது தற்போதைய யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய தளமாக உயர்த்தப்பட்டது என்றும், 2019 -ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள நோட்ரே டேம் பேராலத்தில் ஏற்பட்ட தீ விபத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இத்தீபத்து சிறியது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் பெர்னாண்டன்ஸ்.
ஆகஸ்டு 8, வெள்ளியன்று இரவு 9 மணியளவில் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தூய்மைக்கான இயந்திரத்திலிருந்து கிளம்பிய நெருப்பானது பேராலயத்தில் புகையை அதிகமாக ஏற்படுத்தியது என்றும், நெருப்பு பற்றி விரைவாக பரவ ஆரம்பித்த உடன் தீயணைப்பு வீரர்களால் முழுவதுமாக அணைக்கப்பட்டு இஸ்பெயினின் நினைவுச்சின்னமான ஆலயம் காப்பாற்றப்பட்டது என்றும் உள்ளூர் தொலைக்காட்சி செய்திகளிக்கு எடுத்துரைத்தார் கோர்தோபாவின் மேயர் ஜோஸ் மரியா.
விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பேராலயமானது யுனெஸ்கோவினால் 1984 -ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது என்றும், இது தொடக்கத்தில் இஸ்லாமியர்கள் வழிபடும் வழிபாட்டுத்தலமான மசூதியாக இருந்தது என்றும், 13 ஆம் நூற்றாண்டில், காஸ்டிலின் மன்னர் மூன்றாம் பெர்டினாண்ட் இன் கீழ் இது ஒரு பேராலயமாக மாற்றப்பட்டது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் பெர்ணாண்டஸ்.
ஒரு முன்னாள் மசூதியாக இருந்ததால், கதீட்ரல் பொதுவாக "மெஸ்கிடா" என்று அழைக்கப்படுகிறது, ஸ்பானிஷ் மொழியில் இதற்கு "மசூதி" என்று பொருள்.
இன்று ஒரு பேராலயமாக அது உயர்ந்து இருந்தபோதிலும், இந்த கட்டிடம் இன்னும் மேற்கு முஸ்லிம் உலகில் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது என்றும், ஆண்டுதோறும் ஏறக்குறைய 20 இலட்சம் பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர் என்றும் தெரிவித்தார் ஆயர் பெர்ணாண்டஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்