தேடுதல்

விண்ணேற்பு அன்னை மரியா விண்ணேற்பு அன்னை மரியா  

அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா சிறப்புச் செய்தி

பணிவு எனும் பண்பால் வானுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அன்னைமரியாவின் விண்ணேற்புப் பெருவிழா, நமக்கு நம்பிக்கை தருகின்றது
வழங்குபவர் - அருள்தந்தை எட்வின் ஜார்ஜ் ச.ச.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்னை மரியாவின் வாழ்வின் இரகசியம் அவரது பணிவு, தாழ்ச்சி என்னும் பண்புகளே. தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க தன்னைத் தாழ்த்தி தரணி வாழ்த்த உயர்ந்தவர். 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் (லூக் 1:47-48), என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அன்னை மரியா பணிவு என்னும் தனது பண்பை பாருலகிற்கு வெளிப்படுத்தினார். இச்செயலே இறைவனின் பார்வை அவர் மீது திரும்ப காரணமாக இருந்தது. அவரை விண்ணகத்திற்கும் எடுத்துச் சென்றது. இறைவனால் தான் நிரப்பப்படுவதற்காக, தாழ்நிலையைத் தேர்ந்துகொண்ட அன்னை மரியா,  அருள் நிறைந்தவராக மாறினார். நான்கு சுவர்களுக்குள் ஓர் எளிமையான வாழ்வை வாழ்ந்த ஒருவர், முழு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பெருமை பெற்றார்.

பணிவு எனும் பண்பால் வானுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அன்னைமரியாவின் விண்ணேற்புப் பெருவிழா, நமக்கு நம்பிக்கை தருகின்றது இத்தகைய பெருவிழாவின் சிறப்புக்கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள இருப்பவர் அருள்தந்தை எட்வின் ஜார்ஜ். சலேசிய சபை அருள்பணியாளரான தந்தை அவர்கள் தத்துவஇயலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் உள்ள பூவிருந்தவல்லி குருமடம், இலங்கை, நைஜீரியா மற்றும் இந்தியாவில் உள்ள சலேசிய சபை குருமடங்களிலும் கல்வி கற்பித்தவர். தற்போது உரோமில் உள்ள மரியானும் பல்கலைக்கழகத்தில் மரியியல் சார்ந்த ஆராய்ச்சியினை நிறைவு செய்துள்ளார். தந்தை அவர்களை அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஆகஸ்ட் 2025, 08:29