தேடுதல்

கூட்டத்தில் பங்கேற்றோர் கூட்டத்தில் பங்கேற்றோர்  

கல்விக்கான முன்னோக்கிய சிந்தனை அவசியம்

"21-ஆம் நூற்றாண்டில் கல்வியை மறுபரிசீலனை செய்தல் : உள்ளடக்கிய தன்மை மற்றும் மாற்றத்தை நோக்கிய ஒரு முன்னுதாரண மாற்றம்" என்ற தலைப்பில் இக்கூட்டமானது கல்கத்தாவில் நடைபெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது காலத்தின் சிக்கலான சவால்களுக்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கக்கூடிய கல்விக்கான முன்னோக்கிய சிந்தனை அவசியம் என்றும், அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய கல்வி அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்தினார் அருள்பணி தோமினிக் சாவியோ.

அண்மையில் கல்கத்தாவில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற அருள்பணி மெர்வின் காராபியத் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் கல்கத்தாவில் உள்ள தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் தோமினிக் சாவியோ.

"21-ஆம் நூற்றாண்டில் கல்வியை மறுபரிசீலனை செய்தல் : உள்ளடக்கிய தன்மை மற்றும் மாற்றத்தை நோக்கி ஒரு முன்னுதாரண மாற்றம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உரையாற்றிய அருள்தந்தை தோமினிக் அவர்கள், சமூகப் பொறுப்பு, இரக்கம் மற்றும் மதிப்புகளில் அடித்தளமாக உள்ள மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய பாதையாக, உலகளாவிய அப்போஸ்தலிக்க விருப்பங்களை (UAPs) கல்வி கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போதுள்ள கல்வி முறையை மறுசீரமைக்காமல், கல்வியை மறுகற்பனை செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் பயனற்றதாகவே இருக்கும் என்று எச்சரித்த தந்தை தோமினிக் அவர்கள், இந்தியாவில் சமூகப் பொறுப்புணர்வு, இரக்கம் மற்றும் மதிப்பு சார்ந்த மாணவர்களை இன்று உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவை உள்ளது என்றும் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்வில் தலத்திருஅவை உறுப்பினர்கள், உள்ளூர் அருள்பணியாளர்கள், புனித சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் உட்பட ஏறக்குறைய 100 பேர் கலந்து கொண்டனர்.

கல்கத்தா மறைமாவட்டத்தின் அருள்பணியாளரான தந்தை மெர்வின் காரபியட் அவர்கள், கொல்கத்தாவின் பாரக்பூரில் உள்ள மார்னிங் ஸ்டார் குருத்துவ இல்லத்தில் இறையியல் துறையின் பேராசிரியராகவும் வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர். மேலும் மறைமாவட்டத்தின் ஆங்கிலச் செய்தித்தாள் மற்றும் இந்தியாவின் பழமையான கத்தோலிக்க வார இதழான தி ஹெரால்டில் வழக்கமான கட்டுரையாளராகவும் இருந்தார்.

அவரது எழுத்துக்கள் கிறிஸ்தவ இறையியல், ஹோமிலெடிக்ஸ் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தின. பதற்ற மானுடவியல்" (1978), "நல்லொழுக்கங்கள்" (1985) போன்ற பிரபலமான தலைப்புகள் உட்பட பல புத்தகங்களை எழுதிய தந்தை அவர்கள், 2020- ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஆகஸ்ட் 2025, 12:03