தடம் தந்த தகைமை – நகர்களை வலுப்படுத்திய அரசன் ரெகபெயாம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன: பெத்லகேம், ஏத்தாம், தெக்கோவா, பெத்சூர், சோக்கோ, அதுல்லாம், காத்து, மாரேசா, சீபு, அதோரயிம், இலாக்கிசு, அசேக்கா, சோரா, அய்யலோன், எபிரோன்; இவையே யூதாவிலும் பென்யமினிலும் கட்டப்பட்ட அரண்சூழ் நகர்கள். அவன் நகர்க்கோட்டைகளை வலுப்படுத்தி, அவற்றுக்குத் தளபதிகளை நியமித்தான்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சை இரசம் போன்றவற்றுக்கான கிடங்குகளையும் ஏற்படுத்தினான். அவன் ஈட்டிகளாலும் கேடயங்களாலும் ஒவ்வொரு நகரையும் மிகவும் வலிமைமிக்கதாக்கினான். இவ்வாறு, ,யூதாவும் பென்யமினும் அவன் பக்கமாய் இருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்