தேடுதல்

இஸ்ரயேல் மக்கள் இஸ்ரயேல் மக்கள்  

தடம் தந்த தகைமை - சாலமோனின் மன்றாட்டு

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும், மண்ணிலும் உமக்கு இணையானகடவுள் இல்லை. ஏனெனில், நீர் முழு இதயத்தோடு உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள்மேல் அன்புகூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்!

மெரினா ராஜ் - வத்திக்கான்

சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார். சாலமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான வெண்கலத் திருவுரை மேடை ஒன்று செய்து, அதை முற்றத்தின் நடுவில் வைத்திருந்தார். அதன் மேல் அவர் எறி இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டுத் தம் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தி, மீண்டும் சொன்னதாவது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும், மண்ணிலும் உமக்கு இணையானகடவுள் இல்லை. ஏனெனில், நீர் முழு இதயத்தோடு உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள்மேல் அன்புகூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்! ஆதலால், என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர்.

உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இந்நாளில் நிறைவேற்றியுள்ளீர். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தையும் உம் அடியாருமான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியருளும். ‘நீ என் முன்னிலையில் நடந்துவந்தது போல், உன் மைந்தரும் எனது திருச்சட்டத்தின் வழியைப் பின்பற்றி நடப்பார்களாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க, உன் வழித்தோன்றல் உனக்கு இல்லாது போகான்’ என்று நீர் வாக்களித்துள்ளீர் அன்றோ!  இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியார் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியருளும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 செப்டம்பர் 2025, 16:23