தடம் தந்த தகைமை – இஸ்ரயேலை விட்டு தப்பி ஓடிய ரெகபெயாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம், “என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்; நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்” என்று கூறினான். இவ்வாறு, அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை; ஏனெனில், சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு, “எங்களுக்குத் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை.
இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்!” என்று கூறிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர். ஆனால், யூதா நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள்மீது ரெகபெயாமே ஆட்சி செலுத்தினான். பின்பு, அரசன் ரெகபெயாம், கட்டாய வேலைத் திட்டத்தை முன்பு செயல்படுத்தியவனான அதோராமை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பி வைத்தான். அவர்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்; அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பியோடிப் போனான்.9தாவீதின் குடும்பத்திற்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்