தேடுதல்

அரசன் ரெகபெயாம் அரசன் ரெகபெயாம்  

தடம் தந்த தகைமை – பெரியோர்களின் அறிவுரையைப் புறக்கணித்த ரெகபெயாம்

மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அரசன் ரெகபெயாம், பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, அவன் தன்னோடு வளர்ந்து தனக்குப் பணிசெய்த இளைஞர்களுடன் கலந்துரையாடினான். அவன் அவர்களிடம், “‘உம் தந்தை எங்கள்மேல் சுமத்தின நுகத்தை எளிதாக்கும்’ என்று கேட்கும் இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து என்ன அறிவுரை தருகிறீர்கள்?” என்று கேட்டான். அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம், “‘உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்’ என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்;

“என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது; என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன்; என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்; நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்’ என்று பதிலளிக்கவும்” என்று கூறினர். ‘மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்’ என்று அரசன் கட்டளையிட்டபடி மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 செப்டம்பர் 2025, 16:21