தேடுதல்

புனித கார்லோ அகுதீஸ் ஆலயம் பள்ளிக்கரா புனித கார்லோ அகுதீஸ் ஆலயம் பள்ளிக்கரா 

புனிதத்துவ வாழ்வு சாத்தியம் என்பதற்கு உதாரணம் புனித அகுதீஸ்

இந்தியாவிலும் உலகிலும் முதன்முறையாக புனித கார்லோ அகுதீஸ் அவர்களுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது கொச்சி பகுதியில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கராவில் அமைந்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மிகவும் சுறுசுறுப்பாகவும், தொழில்நுட்பங்களால் உள்வாங்கப்படும் ஒரு கலாச்சார, சமூக மற்றும் தொழில்முறை சூழலில் மூழ்கியுள்ள இளைஞர்களுக்கு புனித கார்லோ அகுதீஸ் அவர்களின் வாழ்வு ஓர் உத்வேகமாக இருக்கும் என்றும், இன்றையக் காலகட்டத்திலும் புனிதத்துவ வாழ்வு சாத்தியம் என்பதற்கு உதாரணமாக அப்புனிதர் இருக்கின்றார் என்றும் கூறினார் பேராயர் Joseph Kalathiparambil.

செப்டம்பர் 7, ஞாயிறன்று திருஅவையில் இளம்புனிதராக புனித கார்லோ அகுதீஸ் அவர்கள் உயர்த்தப்பட்ட அதே நாளன்று அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்றினை இந்தியாவின் கேரள மாநிலத்தில் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றியபோது  இவ்வாறு எடுத்துரைத்தார் வெரபோலி உயர்மறைமாவட்ட பேராயர் Joseph Kalathiparambil.

இந்தியாவிலும் உலகிலும் முதன்முறையாக புனித கார்லோ அகுதீஸ் அவர்களுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது கொச்சி பகுதியில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கராவில் அமைந்துள்ளது.

"இளைஞர் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலத்திருஅவையாக இந்த ஆலயம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்த பேராயர் அவர்கள் உள்ளூர் தலத்திருஅவையினர், புனித அகுதீஸின் வாழ்க்கை, ஆன்மிகம், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைக்க முயலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

"நற்கருணை மீதான புனித அகுதீஸின் அசாதாரண அன்பால் வியப்படையும் நாம், அவரது வாழ்க்கை முழுவதும் திருஅவை அருளடையாளங்களுக்கு அவர் அளித்த மாண்பு மரியாதையானது இணையம் வழியாகவும் வெளிப்படுத்தப்பட்டது என்றும் எடுத்துரைத்தார் பேராயர்.

தூய்மையான புனிதத்துவ வாழ்விற்கான அழைப்பை இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்கு அகுதீஸ் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் என்றும், ஓர் இத்தாலிய இளம் புனிதராக, புனிதம் இன்றைய காலகட்டத்திலும் சாத்தியம் என்பதை எடுத்துரைப்பவராகவும் புனித அகுதீஸ் இருக்கின்றார் என்றும் கூறினார் பேராயர்.

வெராபோலியின் தலத்திருஅவையானது ஏறக்குறைய 370,000 கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ளது, 38 இலட்சம் மக்கள் உள்ள இப்பகுதியானது 183 தலத்திருஅவையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 செப்டம்பர் 2025, 15:40