தேடுதல்

வியாகுல அன்னை வியாகுல அன்னை  

நேர்காணல் – புனித வியாகுல அன்னை திருவிழா

மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா அனுபவித்த துன்பங்களை, ஆண்டவர் இயேசுவோடு பட்ட பாடுகளை இன்றைய நாளில் நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து வாழ அழைக்கப்படுகின்றோம்.
நேர்காணல் - அருள்தந்தை போஸ்கோ மதலை முத்து.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவனின் தாயாம் கன்னி மரியா தனது வாழ்வில் அனுபவித்த வியாகுலங்களை தியானித்து சிந்திக்க அழைப்பு விடுக்கும் நாளே புனித வியாகுல அன்னை திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15ஆம் நாளான்று திருச்சிலுவை திருவிழாவிற்கு அடுத்த நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இத்திருவிழாவானது 1814 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதிதான் மன்னன் அலெக்ஸ்சாண்டரால் வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் அவர்களால் கொண்டாடப் பணிக்கப்பட்டது. மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா அனுபவித்த துன்பங்களை, ஆண்டவர் இயேசுவோடு பட்ட பாடுகளை இன்றைய நாளில் நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

எனவே இன்றைய நமது நேர்காணலில் புனித வியாகுல அன்னை திருவிழா பற்றியக் கருத்ஹ்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள இருப்பவர் அருள்தந்தை போஸ்கோ மதலை முத்து. தர்மபுரி மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை அவர்கள் தின்னூர் பங்கின் பங்கு பொறுப்பாளராக சீரும் சிறப்புமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை புனித வியாகுல அன்னை திருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 செப்டம்பர் 2025, 16:28