நேர்காணல் – மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 26 முதல் 28 வரை திருஅவையில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. கலாச்சார மற்றும் குடும்ப பாரம்பரியத்தில் வேரூன்றிய, இறைவேண்டலால் வலுப்படுத்தப்பட்ட ஒரு சமூக முயற்சிதான் மறைக்கல்வி கற்பித்தல். மறைக்கல்வியாளர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்றுமுள்ள அன்பின் வாழ்வை நோக்கி நகரும் எதார்த்தத்திற்கு சாட்சிகளாகத் திகழ்கின்றார்கள். நிலைவாழ்வை மையமாகக் கொண்டு, ஒருபோதும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கில் உறுதியான நம்பிக்கை வைத்தவர்களாக, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை அறிவிக்கும் மறைப்பணியாளர்களுக்கான யூபிலியானது திருஅவையில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே இன்றைய நமது நேர்காணலில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி. பெனடிக்ட் M.D. ஆனலின்.
குழித்துறை மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்தந்தை ஆனலின் அவர்கள், ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம், சொல்லத் தெரியா அன்பால்.., சங்கமம் அன்பின் சங்கமம்.... என்பன போன்ற பல நூறு திருவழிபாட்டுப் பாடல்களைத் தந்தவர். பல நூல்களைப் படைத்தவர். அதில் ஒன்றுதான்... வத்திக்கான் வானொலியில் தடம் தந்த தகைமை என்ற தலைப்பில் ஒலிபரப்பப்படும் "உம் வாக்கின் வழியிலே..." ஓர் இயற்கை ஆர்வலர். பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்ப்பவர். தற்போது தமிழக மறைக்கல்வி பணிக்குழுச் செயலர். தோழன் மாத இதழ் ஆசிரியர். "மானுட சிற்பி" விருது பெற்றவர். இத்தகைய சிறப்பு பெற்ற தந்தை அவர்களை மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி குறித்தக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்