நேர்காணல் – நீதி வழங்குபவர்கள் மற்றும் ஆலோசனை வழங்குபவர்களுக்கான யூபிலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பிறரை மதித்தல், பிறர் மீது அக்கறை காட்டுதல், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள படைப்பின் மீது அன்பு செலுத்துவதன் வழியாக, நாம் இறைவனின் நிறைவாழ்வில் பங்குகொள்ளுதல் போன்றவையே நீதியாக கருதப்படுகின்றது. ஒருவர் மற்றவரை மாண்போடு நடத்துவதன் வாயிலாக நாம் நீதியுள்ள மனிதர்களாக வாழ்கின்றோம். முதலில் நம்மைப் படைத்த கடவுளை நாம் மதிக்க வேண்டும், இரண்டாவது நம்முடன் வாழ்பவரை, கடவுளின் பிள்ளைகள் மற்றும், மனிதர்கள் என்ற முறையில், அவர்கள் இருப்பது போலவே அவர்களை மதிக்க வேண்டும், மூன்றாவதாக, நம்மையே நாம் மதிக்க வேண்டும், நான்காவதாக, கடவுளின் படைப்பை நாம் மதிக்க வேண்டும். இவ்வாறு நாம் வாழ்ந்தோமானால் நீதி நம் நடுவே நிலைக்கும் நீதியுள்ள உலகம் செழிக்கும். உலக மக்களிடத்தில் நீதியும் மாண்பும் நிலைக்க மக்கள் அனைவரும் அமைதியோடும் மகிழ்வோடும் வாழ நீதி வழங்குபவர்கள் மற்றும் ஆலோசனை வழங்குபவர்களுக்கான யூபிலியானது திருஅவையில் செப்டம்பர் 20 அன்று நீதிக்காகப் பணியாற்றுபவர்களுக்கான யூபிலியாகக் கொண்டாடப்படுகின்றது.
சட்டம் மற்றும் மதச்சார்பற்ற, நியமன மற்றும் திருஅவை நீதி உலகில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்ட பயிற்சியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த யூபிலி விழாவினை சிறப்பிக்கின்றனர். எனவே இன்றைய நமது நேர்காணலில் நீதி வழங்குபவர்கள் மற்றும் ஆலோசனை வழங்குபவர்களுக்கான யூபிலி குறித்தக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை அந்தோணி வினோத். கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை வினோத் அவர்கள் சட்டப்பிரிவு வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை நீதி வழங்குபவர்கள் மற்றும் ஆலோசனை வழங்குபவர்களுக்கான யூபிலி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்