தடம் தந்த தகைமை – இஸ்ரயேலின் அரசனான ரெகபெயாம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேலர் எல்லாரும் ரெகபெயாமை அரசனாக்க செக்கேமில் கூடினர்; அதனால் ரெகபெயாமும் அங்கே சென்றான். அரசர் சாலமோனுக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடிச்சென்றிருந்த நெபாற்றின் மகன் எரொபவாம் இதனைக் கேட்டு எகிப்திலிருந்து திரும்பி வந்தான். அவர்கள் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தனர். எரொபவாம் இஸ்ரயேலர் அனைவரோடும் ரெகபெயாமிடம் வந்து, “உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார்; இப்பொழுது நீர் உம் தந்தை சுமத்தின கடினமான வேலையையும் பளுவான நுகத்தையும் எளிதாக்கும்; நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றான்.
அதற்கு ரெகபெயாம், “இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர். பின்பு, தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவரிடம் பணிபுரிந்த பெரியோர்களை நோக்கி ரெகபெயாம், “இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து, என்ன அறிவுரை தருகிறீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் அவனிடம், “நீர் இம்மக்களுக்கு அன்பு காட்டி, அவர்கள் மனம் குளிருமாறு இன்சொல் பேசினால், அவர்கள் உமக்கு எந்நாளும் பணியாளராய் இருப்பர்” என்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்