தடம் தந்த தகைமை – சாலமோன் அரசரின் புகழைக் காண வந்த சேபா அரசி
மெரினா ராஜ் – வத்திக்கான்
சேபாவின் அரசி சாலமோனின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, கடினமான வினாக்களால் அவரைச் சோதிக்க எருசலேம் வந்தார். பெரும் பரிவராத்தோடும், நறுமணப் பொருள்கள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்த ஒட்டகங்களோடும் அவர் வந்து சாலமோனைக் கண்டு, தம் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினார். சாலமோன் அவருடைய எல்லா வினாக்களுக்கும் விடையளித்தார்; அவர் அவருக்கு விடுவிக்க இயலாத புதிர் ஒன்றுமில்லை. சேபாவின் அரசி சாலமோனின் ஞானத்தையும் அவர் கட்டியிருந்த அரண்மனையையும் கண்டார். அத்துடன், அவரது பந்தி உணவுகளையும், அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும், அவர்களது பணியின் ஒழுங்குமுறையையும், அவர்களுடைய சீருடைகளையும், அவருடைய பானம் பரிமாறுவோர், அவர்களுடைய சீருடைகள், மற்றும் ஆண்டவர் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றையும் கண்டபோது அவர் பேச்சற்றுப் போனார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்