தேடுதல்

அரசர் சாலமோன் அரசர் சாலமோன் 

தடம் தந்த தகைமை – மக்களின் நிலையை இறைவனுக்கு எடுத்துரைக்கும் சாலமோன்

ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால், விண்ணகத்திலிருந்து நீர் அவர்கள் வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் செவிசாய்த்து அவர்களுக்கு வெற்றி அளிப்பீராக!

மெரினா ராஜ் – வத்திக்கான்

உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும்போது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில், நீர் தேர்ந்துகொண்ட இந்நகரையும் உமது பெயருக்கென நான் கட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால், விண்ணகத்திலிருந்து நீர் அவர்கள் வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் செவிசாய்த்து அவர்களுக்கு வெற்றி அளிப்பீராக! பாவம் செய்யாத மனிதரே இல்லை! ஆதலால், அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்தால், நீர் அவர்கள் மேல் சினம்கொண்டு அவர்களை எதிரிகளிடம் கையளிக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு, அப்படி கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனமாற்றம் அடைந்து, ‘நாங்கள் பாவம் செய்தோம்; நெறிதவறினோம்;

தீய வழியில் நடந்தோம்’ என்று அவர்கள் விண்ணப்பம் செய்தால், அதாவது, தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையருக்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி உம்மிடம் வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து அவர்கள் வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து, உமக்கெதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னித்து, அவர்களுக்கு வெற்றி வழங்குவீராக! 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 அக்டோபர் 2025, 10:39