தேடுதல்

புலம்பெயரும் மக்கள் புலம்பெயரும் மக்கள்  

நேர்காணல் – திருஅவையில் சிறப்பிக்கப்படும் புலம்பெயர்ந்தோர்க்கான யூபிலி

திருகோணமலை மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்கள் புலம்பெயர்ந்தோர் யூபிலி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்கின்றார்.
அருள்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புலம்பெயர்ந்தோர் சுற்றுலாப் பயணிகள் அல்ல எனவும், இளையோர், புலம்பெயர்ந்தோரின் கதைகளிலிருந்து, வாழ்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று எடுத்துரைத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு பரிவிரக்கம் கொண்டது போல புலம்பெயர்ந்தோராக சமுதாயத்தின் விளிம்பிலே வாழும் மக்களுக்கு இரக்கத்தையும், அன்பையும், பரிவையும் காட்டியவர். அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் புலம்பெயர்ந்தோருக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. எனவே இன்றைய நமது நேர்காணலில் புலம்பெயர்ந்தோர் பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள இருப்பவர் அருள்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ்.

இலங்கையின் திரிகோணமலையில் உள்ள இறை இரக்கத் திருத்தலத்தின் நிர்வாகத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தை அவர்கள், 2005 ஆம் ஆண்டு குருத்துவ அருள்பொழிவுபெற்றவர். இதற்கு முன்பாக திருகோணமலை மறைமாவட்டத்தின் மறைக்கல்வி நடு நிலையத்தின் இயக்குனராகவும், சதா சகாய அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது திருகோணமலை மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களை புலம்பெயர்ந்தோர் யூபிலி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி  நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 அக்டோபர் 2025, 17:03