திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – நவம்பர் மாதத்தில் சிறப்பிக்கப்படும் யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் 27, முதல் நவம்பர் 1 வரை உலகக் கல்வியாளர்களுக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. பணியாளர்களுக்கான யூபிலியானது நவம்பர் 8 அன்று சிறப்பிக்கப்பட இருக்கின்றது. நவம்பர் 15, சனிக்கிழமையன்று ஏழையருக்கான யூபிலியானது கொண்டாடப்பட இருக்கின்றது. நவம்பர் 16, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் ஒன்பதாவது உலக வறியோர் நாள் கொண்டாட்டத் திருப்பலியானது சிறப்பிக்கப்பட உள்ளது.
நண்பகல் 12.30 மணியளவில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத்துறையால் ஏற்பாடு செய்யப்பட உள்ள மதிய விருந்தில் வறியோருடன் உணவு உண்ண இருக்கின்றார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்