தடம் தந்த தகைமை : தற்பெருமையால் வீழ்ந்த வெள்ளாட்டுக்கிடாய்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நான் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று புறப்பட்டு வந்து, நிலவுலகின் எம்மருங்கிலும் சுற்றியது. அது நிலத்தில் கால் ஊன்றவே இல்லை. அந்த வெள்ளாட்டுக்கிடாயின் கண்களுக்கு இடையில் எடுப்பாகத் தோன்றும் ஒரு கொம்பு இருந்தது. ஆற்றங்கரையில் நிற்கையில் நான் கண்டவாறு, அந்த வெள்ளாட்டுக்கிடாய் இரு கொம்புடைய அச்செம்மறிக்கிடாயை நோக்கிச் சென்று, தன் முழு வலிமையோடும் அதைத் தாக்க அதன்மேல் பாய்ந்தது. அது செம்மறிக்கிடாயை நெருங்கி அதன்மேல் கடுஞ்சினம் கொண்டு அதைத் தாக்கி, அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துவிட்டதை நான் கண்டேன். அதன் எதிரே நிற்கச் செம்மறிக்கிடாய்க்கு வலிமை இல்லை. ஆகவே வெள்ளாட்டுக்கிடாய் அதைத் தரையில் தள்ளி மிதித்து விட்டது.
செம்மறிக்கிடாயை முன்னதன் வலிமையினின்று விடுவிக்க வல்லவர் யாருமில்லை. அதன்பின்னர் வெள்ளாட்டுக்கிடாய் தற்பெருமை மிகக் கொண்டு திரிந்தது; ஆனால் அது வலிமையாக இருந்த பொழுதே அதன் பெரிய கொம்பு முறிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, எடுப்பாகத் தோன்றிய வேறு நான்கு கொம்புகள் முளைத்து, வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்