தேடுதல்

இறைவேண்டல் இறைவேண்டல்  

தடம் தந்த தகைமை : சகோதரர்கள் எழுவரின் சான்று!

‘ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார்’ என்று மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பதுபோல், அவர் உண்மையாகவே நம்மீது பரிவு காட்டுகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார். உடனே மன்னன் கடுஞ்சீற்றம் கொண்டான்; அகன்ற தட்டுகளையும் கொப்பரைகளையும் சூடாக்கும்படி ஆணையிட்டான். அவை விரைவில் சூடாக்கப்பட்டன. முன்னர்ப் பேசியவருடைய உடன்பிறப்புகளும் தாயும் பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய நாக்கைத் துண்டிக்கவும், குடுமித் தோலைக் கீறி எடுக்கவும், கை கால்களை வெட்டவும் மன்னன் ஆணையிட்டான். அவரால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், அவர் இன்னும் உயிருடன் இருந்தபோதே அவரை அடுப்புக்கு அருகில் கொண்டுபோய், அகன்ற தட்டில் போட்டு வாட்டும்படி கட்டளையிட்டான். அதிலிருந்து புகை எங்கும் பரவியது.

ஆனால் அவருடைய சகோதரர்களும் தாயும் மதிப்போடு இறக்கும்படி ஒருவருக்கு ஒருவர் ஊக்கமுட்டிக் கொண்டார்கள். “கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கண்காணித்துவருகிறார்; மக்களுக்கு எதிராகச் சான்று பகர்ந்து அவர்கள்முன், ‘ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார்’ என்று மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பதுபோல், அவர் உண்மையாகவே நம்மீது பரிவு காட்டுகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 நவம்பர் 2025, 16:46