தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  (ANSA)

உடல்நலம்பெற்றுத் திரும்பினார் பேராயர் காலகர்!

பேராயர் காலகர் அவர்களின் உடல்நலம் குறித்து குறிப்பிடுகையில், அவருக்கு சிறியதொரு நோய் இருந்தது என்றும் அவர் விரைவில் நலமடைந்தார் என்றும் கூறினார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருள்பணி. பெர்னாண்டோ.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர். அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவர் நலமடைந்தவுடன், நவம்பர் 8 சனிக்கிழமையன்று, நாடு திரும்பினார் என்றும் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

நவம்பர் 5, புதன்கிழமையன்று, பேராயர் காலகர் அவர்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சேதமடைந்த இரண்டு கோவில்களில் ஒன்றான  கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தைப் பார்வையிட்டார் என்றும்,  பின்னர், அவர் சாந்தா லூசியா பேராலயத்தில் நடைபெற்ற நன்றித் திருப்பலியில் கலந்து கொண்டார் என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேராயர் காலகர் அவர்களின் உடல்நலம் குறித்து குறிப்பிடுகையில், அவருக்கு சிறியதொரு நோய் இருந்தது என்றும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் நலமடைந்தார் என்றும் கூறினார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருள்பணி. பெர்னாண்டோ

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 நவம்பர் 2025, 14:34