தேடுதல்

மாநாட்டில் உரையாற்றும் பவுலோ ரூபினி  மாநாட்டில் உரையாற்றும் பவுலோ ரூபினி  

ஹாங்காங்கில் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மாநாடு!

ஹாங்காங்கில் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் திருஅவைக்கு அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக டிசம்பர் 10 முதல் 12-ஆம் தேதி வரை கூடியது.

செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC) ஹாங்காங்கில் டிசம்பர் 10 முதல் 12-ஆம் தேதி வரை மூன்று நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தந்து. இக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் திருஅவைக்கு அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஒன்றுகூடி விவாதிப்பதற்காக ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளாக ஊடக அறம் சார்ந்த தெளிவான முடிவுகளாலும்,  கல்வி மற்றும் ஊடகக் கல்வியாலும் பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ஹாங்காங்கின் கர்தினால் ஸ்டீபன் சோவ் அவர்கள், செயற்கை நுண்ணறிவை கடவுளின் கொடை என்று வர்ணித்தார்.  மேலும் அது எவ்வாறு மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதையும் ஒழுக்கநெறி மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்பதையும் எடுத்திக்காட்டினார்.

சிறப்பாக, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி அவர்கள், போலிப்பதிவு மற்றும் நடுநிலையின்றி ஒருபக்கமாகப் பேசும் எதிர் விளைவுகளை குறித்தும் மனித முடிவுகளுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் ஆபத்துகள் குறித்தும் எச்சரித்தார்.

மேலும் இன்றைய எண்மமுறை (digital world) மனசாட்சி, விமர்சன சிந்தனை மற்றும் உறவு நேர்மையின்  தேவையைக் குறித்து கர்தினால் சோவ் மற்றும் ரூபினி இருவரும் வலியுறுத்தினர்.

மனிதகுலம், திருஅவை, கத்தோலிக்க ஊடகங்கள் மற்றும் நற்செய்தி அறிவிப்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த அமர்வுகள் இந்தக் கூட்டத்தில் சிறப்புக் கவனம் பெற்றன. மேலும் இக்கூட்டத்தில் ஆசியாவிற்கான மேய்ப்புப் பணி வழிகாட்டுதல்களை உருவாக்கும் நோக்கில் விவாதங்கள் நடைபெற்றன.

அருள்பணியாளர் ஜான் மி ஷென் உரையாற்றுகையில், பன்மொழி திருஅவைப் பணிகளை ஆதரிக்கும் ஒரு கருவியாக செயற்கை நுண்ணறிவின் பங்கை எடுத்துக்காட்டினார், அதேவேளையில், உண்மையான சமூகத் தொடர்பு என்பது மனித மையம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டம் திருப்பலி மற்றும் இறுதி அறிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளை வழங்குவதோடு நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 டிசம்பர் 2025, 13:57