தடம் தந்த தகைமை : இறுமாப்பை கைவிட்ட அந்தியோக்கு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறுதியில் மனமுடைந்தவனாய் அந்தியோக்கு தனது இறுமாப்பைக் கைவிடத்தொடங்கினான்; கடவுளால் தண்டிக்கப்பட்ட நிலையில் அறிவு தெளிந்தான்; ஏனெனில், தொடர்ந்து பெருந்துன்பத்திற்கு உள்ளானான். தன் நாற்றத்தைத் தானே தாங்கமுடியாதபோது அவன், “கடவுளுக்கு அடங்கியிருப்பதே முறை; அழிவுக்குரிய மனிதன் தன்னைக் கடவுளுக்கு இணையாக எண்ணுவது தவறு” என்று கூறினான். அக்கயவன் ஆண்டவருக்கு ஒரு பொருத்தனை செய்தான்; ஆனால் அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவதாக இல்லை. அப்பொருத்தனைப்படி, திருநகரைத் தரை மட்டமாக்கி, அதைக் கல்லறையாக்க விரைந்து வந்தவன் இப்போது அதற்கு விடுதலை கொடுக்க முடிவுசெய்தான்; யூதர்கள் அடக்கம் செய்யப்படுவதற்குக் கூடத் தகுதியற்றவர்கள் என்று கருதி, அவர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரையாக எறிந்துவிடத் திட்டமிட்டிருந்தவன், அவர்கள் எல்லாரையும் ஏதன்சு நகரத்தாருக்கு இணையாக நடத்தவும் எண்ணினான்.
தான் முன்பு கொள்ளையடித்திருந்த திருக்கோவிலை அழகுமிக்க நேர்ச்சைப் படையல்களால் அணிசெய்வதாகவும், தூய கலன்கள் அனைத்தையும் பன்மடங்காகத் திருப்பிக் கொடுப்பதாகவும், பலிகளுக்கான செலவுகளைத் தன் சொந்த வருவாயிலிருந்து கொடுப்பதாகவும் முடிவு செய்தான்; எல்லாவற்றுக்கும் மேலாக, தானே ஒரு யூதனாக மாறுவதாகவும், மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று கடவுளுடைய ஆற்றலை அறிக்கையிடுவதாகவும் உறுதி கூறினான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்