கர்தினால் பித்சபாலா காசா கத்தோலிக்க மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா அவர்கள், காசாவில் உள்ள திருக்குடும்பப் பங்கின் கத்தோலிக்க விசுவாசிகள் அடங்கிய சிறிய குழுவொன்றுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி (William Shomali) மற்றும் ஒரு பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து, பங்கின் நிலை குறித்து மதிப்பீடு செய்யவும், மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யவும், அருள்பணியாளர்கள் மற்றும் பங்கு மக்களின் தேவைகளைக் கேட்டறியவும் இந்த மேய்ப்புப் பணியை மேற்கொண்டுள்ளார் கர்தினால் பித்சபாலா.
கிறிஸ்து பிறப்புத் திருப்பலியைத் தலைமை தாங்கி நடத்துவது உட்பட, கர்தினால் பித்சபாலா அவர்களின் இந்த வருகையானது, காசா கத்தோலிக்கர்களுடன் திரு அவை கொண்டுள்ள தொடர்ச்சியான ஒன்றிப்பை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், தொடர்ச்சியான துயரங்களுக்கு மத்தியில் நம்பிக்கை, இறைவேண்டல் மற்றும் ஆதரவுடன் அம்மக்களுடன் துணைநிற்பதற்கான திரு அவையின் அர்ப்பணிப்பையும் அவரின் இந்த பங்கேற்பு உறுதிப்படுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்