தேடுதல்

இந்திய நீதிமன்ற தீர்ப்பு இந்திய நீதிமன்ற தீர்ப்பு 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இந்தியத் தலத்திருஅவைத் தலைவர்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 441 வழக்குரைஞர் மன்றங்களின் உறுப்பினர்களில் வெறும் 9 பேர் மட்டுமே பெண்கள் என்றும், 11 மாநில வழக்குரைஞர் மன்றங்களில் ஒரு பெண் கூட இல்லை என்றும் சுட்டிக்காட்டும் மனுக்கள் மீது நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

செபஸ்தியான் வனத்தையன்

மாநில வழக்குரைஞர் மன்றங்களில் 30 விழுக்காட்டு இடங்களைப் பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை இந்தியத் தலத்திருஅவைத் தலைவர்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர் என்று யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது

டிசம்பர் 8, திங்களன்று, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடைபெற்ற அமர்வு, பெண்கள் குறைவாக உள்ள சட்ட அமைப்புகளில் பாலின பாகுபாட்டை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

வழக்குரைஞர் மன்றங்களின் தேர்தல்களில் பெண் வழக்கறிஞர்களுக்கான இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யத் தவறினால், 20 விழுக்காடு இடங்கள் தேர்தல் மூலமாகவும், 10 விழுக்காடு இடங்கள் தகுதியான பெண் வழக்கறிஞர்களை நியமிப்பதன் மூலமாகவும் நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தலைமை நீதிபதி.

இந்தியத் தலத்திருஅவையின் பிரதிநிதிகள், அருட்தந்தை இராபின்சன் ரோட்ரிக்ஸ் மற்றும் பல பெண் துறவியர்  உட்பட அனைவரும், பெண் வழக்கறிஞர்களுக்கான இட ஒதுக்கீடு சார்பான இந்த முடிவினை சமத்துவத்திற்கான ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்தகைய அதிக பிரதிநிதித்துவம் சட்ட நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 441 வழக்குரைஞர் மன்றங்களின் உறுப்பினர்களில் வெறும் 9 பேர் மட்டுமே பெண்கள் என்றும், 11 மாநில வழக்குரைஞர் மன்றங்களில் ஒரு பெண் கூட இல்லை என்றும் சுட்டிக்காட்டும் மனுக்கள் மீது நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த உத்தரவை குறித்து பல விமர்சகர்கள் கூறுகையில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்று பாராட்டினாலும் உண்மையான சமத்துவத்திற்கு 30 விழுக்காடு வரம்பை அதிகரித்தால் மட்டுமே, புறக்கணிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 டிசம்பர் 2025, 14:46