தேடுதல்

நைஜீரிய குழந்தைகள் நைஜீரிய குழந்தைகள்   (AFP or licensors)

நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஒன்பது குழந்தைகள் விடுவிப்பு!

பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே, நைஜீரியாவின் பேணுவே மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் : பீதேஸ் செய்தி நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நைஜீரியாவின் பேணுவே மாநிலத்தின் உடோன்கானில் உள்ள புனித சிலுவை யோவான் பணித்தளத்தில் இருந்து கடந்த வாரம் கடத்தப்பட்ட ஒன்பது குழந்தைகள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று பீதேஸ் எனப்படும் கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"அடோ உள்ளூர் அரசுப் பகுதியில் உள்ள கத்தோலிக்கப் பணித்தளத்தில் இரவு விழிப்புணர்வு இறைவேண்டலின் போது ஆறு சிறுமிகளும் மூன்று சிறுவர்களும் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

"இந்நிலையில் காவல்துறையினர் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் என்றும், சோதனைகளின் போது ஒரு AK-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்" என்றும் உரைக்கும் அச்செய்தி நிறுவனம், "பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே, குழந்தைகள் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்" என்றும் கூறியுள்ளது.

"நைஜர் மாநிலத்தில் நடந்த ஒரு தனித் தாக்குதலில், போர்கு உள்ளூர் அரசுப் பகுதியில் உள்ள மூன்று சமூகங்களை இருசக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய நபர்கள் தாக்கியதில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன, பலர் கடத்தப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

"மேலும் கைன்ஜி வனப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதி நீண்ட காலமாக ஆயுதமேந்திய குழுக்களுக்கு ஒரு கோட்டையாக இருந்து வருகிறது” என்றும், “இதில் போகோ ஹராமுடன் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பிணைப்பணத்திற்காக (ransom) கடத்தல்களில் ஈடுபட்டுள்ள குற்றவியல் கும்பல்கள் அடங்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 பிப்ரவரி 2026, 11:38