தேடுதல்

ஆயர் ஷ்மித்தேயஸ்லர் ஆயர் ஷ்மித்தேயஸ்லர்  

375 புதிய கிறிஸ்தவர்களை வரவேற்கும் கம்போடியா தலத் திருஅவை!

நவீன உலகில் மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுக்கு மருந்தாக இறையருள் இருக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

கம்போடியாவிலுள்ள பட்டம்பாங்கில், இந்த ஆண்டு இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பலர் புதிதாக திருமுழுக்கு பெற்றிருப்பது நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது என்று பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 5, உயிர்ப்பு ஞாயிறன்று,  92 பேர் திருமுழுக்கு பெற்றதாக அச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள அருள்பணியாளர் என்ரிக் ஃபிகாரெடோ அவர்கள், இளைஞர்கள் அதிகம் பங்கேற்ற இந்த திருமுழுக்கு கொண்டாட்டம் பல இளம் கம்போடியர்கள் கடவுளின் அழைப்பிற்குப் பதிலளிப்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தாய்லாந்துடனான எல்லைப் பதற்றங்கள், இடம்பெயர்வு, வேலையின்மை மற்றும் பொருளாதாரச் சிரமங்கள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், இந்த இளம் நம்பிக்கையாளர்கள் திருஅவைக்கு மகிழ்ச்சியையும் புதுப்பிக்கப்பட்ட பலத்தையும் தருகிறார்கள்" என்றும் அருள்பணியாளர் ஃபிகாரெடோ அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.

கம்போடியா முழுவதும் வாழும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், உயிர்ப்புப் பெருவிழாவின்போது மொத்தம் 375 நபர்கள் திருமுழுக்கு பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும் அருள்பணியாளர் ஃபிகாரெடோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கம்போடியா மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு வழிபாட்டின் போது கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது வெறும் ஒரு நிகழ்வு அல்ல என்றும், அது மரணத்தின் மீதான இறுதி வெற்றி என்றும் ஆயர் ஷ்மித்தேயஸ்லர் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள், நிச்சயமற்ற தன்மை மற்றும் துன்பங்களைக் கண்டு பயப்பட வேண்டாம்  வலியுறுத்தியுள்ள ஆயர் ஷ்மித்தேயஸ்லர் அவர்கள், நவீன உலகில் மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுக்கு மருந்தாக இறையருள்' இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களிலும் சமுதாயத்திலும் அமைதியையும் மன்னிப்பையும் முன்னெடுக்க வேண்டும் என்று ஆயர்  ஷ்மித்தேயஸ்லர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்ப்பு  பெருவிழாவையும், கம்போடிய மக்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழா மற்றும் புத்தாண்டுத் தொடக்கத்தையும்  (Khmer New Year) ஒன்றிணைத்து ஆயர் ஆலிவர் வழங்கிய இந்தச் செய்தி கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2026, 15:40