இன்றைய புனிதர்
திரு. அலெக்ஸ்
போலந்து நாட்டில் பல ஆண்டுகள் குழந்தை பேறு இன்றி இருந்த பெலிஸ்லாஸ், போக்னா பெற்றோருக்கு கி.பி. 1030 ஆம் ஆண்டு பிறந்தார் ஸ்தனிஸ்லாஸ். போலந்து நாட்டிலுள்ள நேசன் எனுமிடத்தில் கல்வி பயின்ற ஸ்தனிஸ்லாஸ் ஆண்டவரின் பணிகளை செய்வதற்கு ஆர்வம் கொண்டு குருவாக அருட்பொழிவுபெற்றார். போலந்து நாட்டின் க்ராக்கோ நகருக்கு அருகிலுள்ள செம்போக்ஸ் என்ற பணித்தளத்தில் நியமணம் செய்யப்பட்ட அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் தன் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்
க்ரோக்கோ நகர பேராலய பங்குத்தந்தையாகவும் க்ரோக்கோ மறைமாவட்ட முதன்மை குருவாகவும் தன் பணிகளை திறம்பட செய்த அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் கி.பி. 1072 ஆம் ஆண்டு க்ரோக்கோ நகர ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். போலந்து அரசன் இரண்டாம் போலஸ்லாஸின் தவறுகளை சுட்டிகாட்டிய ஆயர் ஸ்தனிஸ்லாஸ் அந்நாட்டு மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியினை போதித்து அவர்களை ஆண்டவரில் வேரூன்ற செய்தார். அரசன் இரண்டாம் போல்ஸ்லாஸ் தொடர்ந்து செய்த தவறுகளினால் மக்கள் துன்புற இதனைக்கண்ட ஆயர் ஸ்தனிஸ்லாஸ் கி.பி. 1079 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள் அரசன் போல்லாஸினை திருச்சபையிலிருந்து புறம்பாக்கினார்.
அரசரும் சாமானிய மக்களும் ஆண்டவரின் முன்பு சமமானவர்கள் என்று கூறிய ஆயர் ஸ்தனிஸ்லாஸ் கி.பி 1079 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது அரசன் போல்ஸ்லாஸினால் தலைவெட்டப்பட்டு மறைசாட்சியாக உயிர்துறந்தார். தன் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு பகிர்ந்தளித்து ஆண்டவரின் பணிக்காக தன்னை அர்பணித்த ஆயர் ஸ்தனிஸ்லாஸினை திருத்தந்தை 4 ஆம் இன்னொசென்ட் கி.பி 1253 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தி போர்வீரர்களின் பாதுகாவலராக அறிவித்தார். இன்று புனித ஸ்தனிஸ்லாஸ் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம் நம் தாய் திருநாட்டை பாதுகாக்கின்ற முப்படை வீரர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்